செல்போன்களில் பேச ரீசார்ஜ் செய்து கொள்வது போல இனி செல்போன் எண்களை நீண்டகாலம் தொடர்ந்து பயன்படுத்தவும் தனி கட்டணம் வசூலிக்க டிராய் புதிய திட்டம் தீட்டியுள்ளது.
புதிய டெலிகாம் சட்டம் கடந்தாண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி தொலைத தொடர்பு நிறுவனங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தனிக்கட்டணம் விதிக்கவும் டிராய் புதிய பரிந்துரை அளித்துள்ளது.
அப்படி தனிக்கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில் அதனை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்தே வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.
உதாரணமாக 2 சிம்கார்டுகளில் ஒன்றை மட்டும் அடிக்கடி சிலர் பயன்படுத்தும் நிலையில், மற்றொரு எண்ணை குறைவாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நகரங்களில் இப்படி தனிக்கட்டணம் வசூலிக்கும் முறை அமலில் இருப்பதாக டிராய் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு முறை கட்டணம் வசூலிப்பதா இல்லை ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிப்பதா என்ற முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.