தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, மொத்தம் 105 பணியிடங்களை நிரப்புவதற்காக நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தற்போது தொடங்கியுள்ளது. இந்த தேர்வுக்கு செப்டம்பர் 28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here