#காட்டுப்பூச்சி கொடுத்த ஷாக் – 8

நாங்கள் அடுத்து என்ன விளையாட்டு விளையாடலாம் என்ற தேடுதல் வேட்டையில் இருக்கும் போது… சுப்பிரமணி எங்களிடம் வந்தான்…

“வாங்க இதை ட்ரை பண்ணலாம்.. செம்மயா.. இருக்கும்”… என்று கூறினான்.

அந்த மிருகத்தை அப்போது தான் பார்த்தேன்..

பூங்காக்களில்  உடற்பயிற்சி  செய்யும் இடங்களில் கால்களில் அதை பொருத்திக் கொண்டு நடப்பார்களே அதைப் போல இருந்தது.. 

என்ன வித்தியாசமென்றால்.. அது சிறுசு… இது ரொம்ம்ம்ப… பெருசு… 

” டேய் எனக்கு பயமா இருக்கு இதெல்லாம் வேணாம்.. இப்ப ஜெய்மீ கூட்டிட்டு போச்சு.. நல்லா ஜாலியா இருந்துச்சு.. அது மாதிரி இருக்குமா “என்று கேட்டேன்..

” ஆமா.. ஆந்தே.. இது தாலாட்டுற மாதிரியே இருக்கும்.. பயமே இருக்காது.. வா…”  என என் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றான்… நிற்க… இழுத்துச்சென்றான்…

அந்த வரிசையில், நவீன், விபின், ஸ்வேதா, சிந்து, பரத், சந்துரு,நிர்மலா, கிஷான், என எல்லாரும் இருந்தனர்.. 

பிறகென்ன நானும் அதில் ஏற ஆயத்தமானேன்.. ஜெய்மீ,மதன்சார், கிறிஸ்டினா, விகாஷ் என எல்லாரும் ஏறினார்கள் ..

நான் தனியாக அமர மாட்டேனல்லவா.. எனக்கு துணையாக சந்துரு அமர்ந்து கொண்டான்.. 

அந்த ராட்டினத்தை இயக்குபவர் வந்தார். சீட் பெல்ட் சரியாக அணிந்திருக்கிறோமா என ஆராய்ந்தார்.. 

தாலாட்டுவதற்கு எதற்கு சீட் பெல்ட் என யோசித்தேன்.. 

ஆனாலும் என்னுடைய சிற்றறிவுக்கு அப்போதைக்கு எதுவும் எட்டவில்லை… 

எல்லாம் தயார்.. இப்போது அந்த இயந்திரம் இயங்க ஆரம்பித்தது… 

கை வீசம்மா கை வீசு கடைக்கு போகலாம் கைவீசு.. என்பது போல முதலில் மெதுவாகத் தான் ஆரம்பமானது… 

அப்பறம் தான் தெரிந்தது.. இந்த பையன் பைரைட்ஸ் க்கும் தாத்தா… 

சுத்துறான் சுத்துறான்.. கண்ட மேனிக்கு சுத்துறான்… இறக்கி விடுங்கடானு கத்தவே ஆரம்பித்து விட்டேன்..

சுற்றிலும் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட அறை.. சீட் பெல்ட்… கிரில் கதவு.. இதை மீறி எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்ற வெறி முடிந்த மட்டும் மேலே இருந்த கம்பியைப் பிடித்து இழுத்தேன்…

எனக்கு மட்டும் அந்த நேரத்தில் சூப்பர் பவர் கிடைத்திருந்தால் அந்த கால் முளைத்த இயந்திரத்தின் கால்களை இரண்டாக பிய்த்து எறிந்திருப்பேன்…

இவ்வளவு ரணகளத்திலும் என்  கண்களை மட்டும் திறக்கவே இல்லை… 

நானாவது பரவாயில்லை.. தப்பிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருந்தேன்.. 

பக்கத்தில் அமர்ந்திருந்த சந்துரு… வாயில் வந்த வசை மொழிகள் அத்தனையும் கூறிக்கொண்டிருந்தான்.. 

நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் தானே படித்தோம்.. சிந்தனையும் ஒரே மாதிரிதானே இருக்கும்.. 

நான் அந்த ஆபரேட்டரை திட்டிக் கொண்டிருக்க… அவனோ அந்த ஆபரேட்டிரின் பரம்பரையையே திட்டிக் கொண்டிந்தான்… 

இப்போது நாங்கள் தலை கீழாக தொங்கிக் கொண்டு இருந்தோம்.. 

“எல்லாம் ஒரு அளவுக்குத் தான் ப்ரோ”

தலைகீழாக தொங்கிய அனுபவம் உங்களுக்கு ஏற்படுமாயின் என் சிரமம் உங்களுக்குத் தெரியும்…

வயிற்றில் உள்ள உணவு தொண்டை வரை வந்து எட்டிப் பார்த்து Hai How R U ? என கேட்டு விட்டு சென்றது… 

“டேய் காட்டுப்பூச்சி கண்ணுல மாட்டுன உன்னைக் கொல்லாம விடமாட்டேன்டா” என கத்தினேன்.. 

”தாலாட்டு போல இருக்கும் ஆந்தே என்று கோர்த்து விட்டுப் போயிட்டியேடா…” படுவாவி என கத்தினேன்.. 

ஒரு கட்டத்தில் எல்லாம் முடிந்து விட்டது என நினைத்தேன்.. 

ஆனாலும் நாசமா போன அந்த ஆபரேட்டர் கடைசில ஒரு சுத்து சுத்துனான் பாருங்க.. அர்த்தநாடியும் அடங்கி போயிடுச்சு… 

ஒரு வழியாக எல்லாம் முடிந்தது… 

வெளியே வந்தேன்.. புதிதாக பிறந்த மாதிரியான உணர்வு… 

என் கண்கள் முதலில் தேடியது.. காட்டுப் பூச்சி என்ற ராஸ்கலைத் தான்.. ஓடிப்போய்விட்டான்.. 

இதே காட்டுப்பூச்சி மோனிகா மேடத்தையும் ஏமாற்றி ஒரு சம்பவம் செய்திருக்கிறான் என எனக்கு பின்புதான் தெரிந்தது..

அதை அவர்கள் சொல்லும் போது நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..! 

அடுத்து..? அடுத்து என்ன..? நாங்களும், நீங்களும் ஆவலோடு எதிர்பார்த்த வாட்டர் விளையாட்டு தான்! 

இனிமே தான் இருக்கு தரமான சம்பவங்கள்..! 

தொடரும் –

-ர- ஆனந்தன்-

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here