“ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்”- தவெக தலைவர் விஜய்!

prime9logo
66 Views
1 Min Read

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118- வது ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் அவரது அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
  “விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.

சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply