தொழில்நுட்பக் கோளாறால் பூங்கா நிலையத்தில் பழுதாகி நின்றது ரயில்: தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

Priya
609 Views
1 Min Read

 பூங்கா நிலை​யத்​தில் மின்​சார ரயில் பழு​தாகி நின்​ற​தால், தாம்​பரம் – கடற்​கரை மார்க்​கத்​தில் மின்​சார ரயில் சேவை நேற்று மாலை ஒரு மணி நேரத்​துக்கு மேல் தடைபட்​டது. தாம்​பரத்​தில் இருந்து கடற்​கரை நோக்கி மின்​சார ரயில் நேற்று மாலை 4.50 மணிக்கு புறப்​பட்​டது.

இந்த ரயில் பூங்கா நகர் ரயில் நிலை​யத்தை சுமார் 5.20 மணி அளவில் அடைந்​த​போது, தொழில்நுட்​பக் கோளாறு ஏற்​பட்டு நின்​றது. ரயி​லில் காற்​றழுத்​தம் குறைதல் (‘ஏர் லாக்’) ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

ரயில்வே பொறி​யாளர்​கள், ஊழியர்​கள் விரைந்து வந்து கோளாறை சரிசெய்​யும் பணி​யில் ஏற்​பட்​டனர். இதற்​கிடையே, தாம்​பரத்​தில் இருந்து கடற்​கரை நோக்கி வந்த மின்​சார ரயில்​கள் மாம்​பலம், நுங்​கம்​பாக்​கம், சேத்​துப்​பட்​டு, எழும்​பூர் உட்பட பல நிலை​யங்​களில் நிறுத்​தப்​பட்​டன.

இதுத​விர, பயணி​கள் சிறப்பு ரயிலும், விழுப்​புரம்-சென்னை கடற்​கரை மெமு ரயிலும் பூங்​கா, எழும்​பூரில் நிறுத்​தப்​பட்டன. கடற்​கரை​யில் இருந்து தாம்​பரம் நோக்கி மின்​சார ரயில்​கள் வழக்​கம்​போல இயங்​கிய நிலை​யில், எதிர் மார்க்​கத்​தில் மட்​டும் ரயில்​கள் நெடுநேரம் புறப்​ப​டா​மல் அங்​கேயே நின்​ற​தால், பயணி​கள் காரணம் தெரி​யாமல் குழப்​பம் அடைந்​தனர்.

பலர் ரயில்​களில் இருந்து இறங்கி அருகே உள்ள மெட்ரோ நிலை​யம், பேருந்து நிறுத்​தங்​களுக்​குச் சென்​று, அங்​கிருந்து மெட்ரோ ரயில், பேருந்​துகளில் ஏறிச் சென்​றனர். இதற்​கிடையே, பூங்கா நிலை​யத்​தில் நின்ற மின்​சார ரயி​லில் ஏற்​பட்ட பழுதை ஒரு மணி நேரம் போராடி ஊழியர்​கள் சரிசெய்​தனர்.

இதையடுத்​து, மாலை 6.25 மணி முதல் தாம்​பரம் – கடற்​கரை நோக்கி மின்​சார ரயில்​கள் இயக்​கம் சீரானது. மின்​சார ரயில் சேவை ஒரு​மணி நேரத்​துக்கு மேல் பாதிக்​கப்​பட்​ட​தால், பயணி​கள் கடும் அவதிப்​பட்​டனர்.

இந்த சூழலில், எழும்​பூரில் அடுத்​தடுத்து ரயில்​கள் நின்​றதை படமெடுத்த சிலர், ஒரே தண்​ட​வாளத்​தில் இரு ரயில்​கள் எதிர் எதிரே வந்​த​தாக தகவல்பரப்​பினர். வலை​தளங்​களில் இதுவைரலாக பரவியது. இந்த செய்​தி​கள் தவறானவை அடிப்​படை ஆதா​ரமற்​றவை என தெற்கு ரயில்வே மறுத்​துள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply