தீவுத்திடல் முதல் கலங்கரை விளக்கம் வரை ‘சிங்கப்பெண் மாரத்தான்’: 3,000 பெண்கள் பங்கேற்பு

Priya
468 Views
2 Min Read

கர்ப்​பப்பை வாய் புற்​று​நோய் குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​த​வும், பெண்​களின் பாது​காப்பு மற்​றும் அதி​காரமளித்​தலை வலி​யுறுத்​த​வும் சென்னை தீவுத்​திடலில் நேற்று ‘சிங்கப்பெண் மாரத்​தான் 2026’ நடை​பெற்​றது.

இதில் சுமார் 3,000 பெண்​கள் உற்​சாகத்​துடன் கலந்து கொண்​டனர். ரோட்​டரி கிளப் ஆஃப் மெட்​ராஸ் சென்ட்​ரல், மாவட்​டம் 323-க்கு உட்​பட்ட இன்​னர்​வீல் கிளப்​கள் மற்​றும் சிங்​கப்​பெண் சிறப்​புப் படை இணைந்து மகளிர் மட்​டுமே பங்​கேற்ற விழிப்​புணர்வு ஓட்​டத்தை நடத்​தின.

8 கிலோமீட்​டர் ஓட்​டம்

நேற்று (9-ம் தேதி) காலை 6 மணிக்கு சென்னை தீவுத்​திடலில் இருந்து மாரத்​தான் தொடங்​கியது. அங்​கிருந்து மெரினா கடற்​கரை வழி​யாக கலங்​கரை விளக்​கம் வரை சென்​று, மீண்​டும் தீவுத்​திடலுக்கு திரும்​பும் வகை​யில் 8 கிலோமீட்​டர் தூரத்​துக்கு ஓட்​டம் நடை​பெற்​றது.

கல்​லூரி மாணவி​கள், பணிபுரி​யும் பெண்​கள், இல்​லத்​தரசிகள் மற்​றும் சிங்​கப்​பெண் சிறப்​புப் படையைச் சேர்ந்த பெண் போலீ​ஸார் உட்பட சுமார் 3,000 பேர் இதில் பங்​கேற்​றனர்.

சிங்​கப்​பெண் சிறப்​புப் படை​யின் தலை​வரும், போலீஸ் ஐ.ஜி.​யு​மான கே.ப​வானீஸ்​வரி சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்டு மாரத்​தானை கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

இந்த ஓட்​டத்​தின் மூலம் கர்ப்​பப்பை வாய் புற்​று​நோயை ஆரம்ப நிலை​யிலேயே கண்​டறிதல், தடுப்​பூசி மூலம் நோயைத் தடுப்​பது உள்​ளிட்​டவை குறித்து பெண்​களிடையே விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்​டது.

பெண்​கள் பாது​காப்​பு

நிகழ்ச்​சி​யில் பேசிய ஐ.ஜி. கே.ப​வானீஸ்​வரி, கர்ப்​பப்பை வாய் புற்​று​நோயை தடுப்​ப​தற்​கான விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வதுடன், பெண்​களின் பாது​காப்​பை​யும் அதி​காரமளித்​தலை​யும் ஒருசேர வலி​யுறுத்​து​வதே இந்த மாரத்​தானின் முக்​கிய நோக்​கம் என்று தெரி​வித்​தார்.

சிங்​கப்​பெண் சிறப்​புப் படையைச் சேர்ந்த பெண் போலீ​ஸார் பொது​மக்​களு​டன் இணைந்து ஓட்​டத்​தில் பங்​கேற்​றதன் மூலம், பெண்​களு​டன் நேரடி​யாக தொடர்பு ஏற்​படுத்​தும் வாய்ப்​பும் கிடைத்​தது.

பெண்​கள் எந்த நேரத்​தி​லும் பாது​காப்​பாக இருக்​க​வும், அவர்​களுக்கு தேவை​யான உதவி​களை வழங்​க​வும் சிங்​கப்​பெண் சிறப்​புப் படை உறு​தி​யாக செயல்​படும் என்ற நம்​பிக்​கை​யை​யும் இந்த நிகழ்ச்சி ஏற்​படுத்​தி​யது.

மேலும், பெண்​கள் அவசர காலங்​களில் போலீ​ஸாரின் ‘1091 உதவி எண்​ணை’ பயன்​படுத்தி உதவி பெறலாம் என்​பது குறித்​தும் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்​டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply