பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பழைய ஓய்வூதியத்திட்ட மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: தவெக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதுபோல, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கடந்த ஆட்சியாளர்களால் தமிழ்நாடுஉறுதியான ஓய்வூதிய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.11,000 கோடி பட்ஜெட்டில் சேர்க்கப்படவில்லை, அதுகுறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஜன.1-ம் தேதிக்கு முன்னர் பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தில் ஓய்வுபெற்ற 50 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

