வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, இன்று தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பருவமழை தொடர்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில், நடந்துள்ள பணிகள் குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மாநகராட்சி, நெடுஞ்சாலை, குடிநீர் வழங்கல், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினோம்.
குறிப்பாக, பழுதடையும் சாலைகளை உடனுக்குடன் சரி செய்யவும், மின்சார பாக்ஸ்கள், கேபிள்களை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினோம். இயற்கைச் சவாலை கூட்டுமுயற்சியுடன் எதிர்கொண்டு – பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!” என தெரிவித்துள்ளார்.

