நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளிமுன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கிலான #STEM ஆய்வகங்கள், Smart வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை அரசுப் பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளோம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
“ஆயிரம் கோடியைத் தொட்டது #நம்மஸ்கூல்_நம்மஊருபள்ளி நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி! இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது நமது #DravidianModel அரசு.
அரசின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக, 5 லட்ச ரூபாயை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கிலான #STEM ஆய்வகங்கள், Smart வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை அரசுப் பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளோம்!
நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் & 1,500 நன்கொடையாளர்களுக்கும் நனிநன்றிகள். இத்தனை பேரின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி வெளிப்படைத்தன்மையோடும் நேர்மையாகவும் செயல்பட்டு, நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் #NSNOP அறக்கட்டளைத் தலைவர் திரு. வேணு சீனிவாசன் ஆகியோருக்குப் பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 