ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி. பழனிச்சாமி நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவருக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
” #AsianYouthGames– ல் வெற்றி வாகை சூடிய இந்திய வீராங்கனை, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்தேன். எளிய பின்னணியில் இருந்து தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் கபடி விளையாட்டில் ஜொலித்து வரும் கார்த்திகா, மென்மேலும் பல வெற்றிகளைக் குவித்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் பெருமைகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார்.

