தெருக்களின் சாதிப் பெயர்களை அகற்ற நடவடிக்கை: தமிழக அரசுக்கு உத்தரவு

Priya
1317 Views
1 Min Read

தெரு, சாலைகளின் பெயர்​களில் இடம்​பெற்​றுள்ள சாதிப் பெயர்​களை அகற்​று​வது தொடர்​பான நீதி​மன்ற உத்​தர​வு​களை அமல்​படுத்​து​வதை உறுதி செய்ய வேண்​டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி என்​.ரமேஷ் முன்பு விசா​ரணைக்கு வந்​த ஒரு வழக்​கின் முதல் தகவல் அறிக்​கை​யில் தெரு பெயரில் சாதிப் பெயர் இடம்​பெற்​றிருந்தது இதைச் சுட்​டிக்​காட்​டிய நீதிப​தி, “தெருக்​கள், சாலைகளில் இடம் பெற்​றுள்ள சாதிப் பெயர்​களை நீக்க வேண்​டும் என கடந்த 1998-ம் ஆண்டே அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

நீதி​மன்ற உத்​தர​வு​களும் உள்​ளன. இருப்​பினும், இன்​னும் தெருக்​களின் பெயர்​களில் சாதிப் பெயர்​கள் இடம் பெற்​றுள்​ளன” என குறிப்​பிட்​டார்.

மேலும், ‘‘தெருக்​கள், சாலைகளின் பெயர்​களில் இடம்​பெற்​றுள்ள சாதிப் பெயர்​களை நீக்​கு​வது தொடர்​பான நீதி​மன்ற உத்​தர​வு​களை​யும், அரசு உத்​தர​வு​களை​யும் அமல்​படுத்​து​வதை உறுதி செய்ய இதுவே சரி​யான நேரம்” என குறிப்​பிட்ட நீதிப​தி, தெரு பெயர்​களில் உள்ள சாதிப் பெயர்​களை நீக்​கு​வது தொடர்​பாக தாமாக முன்​வந்து வழக்கை பதிவு செய்​து, தலைமை நீதிபதி முன் சமர்ப்​பிக்​கும்​படி, உயர் நீதி​மன்ற பதிவுத்​துறைக்​கு உத்​தர​விட்​டுள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply