அரசு அலுவலகங்களில் அதிகரிக்கும் டிஜிட்டல் லஞ்சம்: யுபிஐ பரிவர்த்தனைகளால் சிக்கும் அதிகாரிகள்

Priya
20 Views
2 Min Read

அரசு அலு​வல​கங்​களில் யுபிஐ பரிவர்த்​தனை​கள் மூலம் அதி​களவு லஞ்​சம் பெறு​வது லஞ்ச ஒழிப்பு போலீ​ஸாரின் சோதனை​களில் தெரிய​வந்​துள்​ளது.

தமிழக அரசுத் துறை​களில் லஞ்​சப் பரிவர்த்​தனை​யின் வடிவம் காலத்​துக்​கேற்ப மாறி வரு​கிறது. ஒரு​காலத்​தில் மேஜைக்​குக் கீழே ரொக்​க​மாக கைமாறிய பணம், தற்​போது ஜி-பே, போன்​பே, பேடிஎம் என யுபிஐ செயலிகள் வழி​யாக பரி​மாறப்​படு​வது, லஞ்ச ஒழிப்பு போலீ​ஸாரின் அண்​மைய சோதனை​களில் வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது.

குறிப்​பாக, வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வல​கங்​கள் மற்​றும் தாலுகா அலு​வல​கங்​களில் நடந்த சோதனை​களில், ரொக்​கத்​தை​விட டிஜிட்​டல் பரிவர்த்​தனை​களே முக்​கிய ஆதா​ரங்​களாக மாறி​யுள்​ளன. தமிழகம் முழு​வதும் கடந்த சில தினங்​களாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் தொடர் சோதனை​களை மேற்​கொண்டு வரு​கின்​றனர். அந்த வகை​யில் கடந்த மாதம் 4-ம் தேதி 46 சார்​-ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் ஒரே நேரத்​தில் நடத்​தப்​பட்ட சோதனை​யில், கணக்​கில் காட்​டப்​ப​டாத ரூ.37.75 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

அதைத் தொடர்ந்​து, கடந்த மாதம் 18-ம் தேதி மாநிலம் முழு​வதும் 40 வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வல​கங்​களில் (ஆர்​.டி.ஓ.) சோதனை நடத்​தப்​பட்டது. இதில், ரூ.37.81 லட்​சம் கணக்​கில் வராத பணம் கைப்​பற்​றப்​பட்​டது. அதை​விட முக்​கிய​மாக, ஜி-பே உள்​ளிட்ட யுபிஐ பரிவர்த்​தனை​கள் மூல​மாக சுமார் ரூ.6 லட்​சம் வரை கைமாறி​யிருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

மூன்​றாவது கட்​ட​மாக, கடந்த 17-ம் தேதி 35 தாலுகா அலு​வல​கங்​களில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். இதில், கணக்​கில் காட்​டப்​ப​டாத ரூ.82.10 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இதில் அதிர்ச்சி அளிக்​கும் வகை​யில், ஜி-பே உள்​ளிட்ட டிஜிட்​டல் பரிவர்த்​தனை​கள் மூல​மாக மட்​டும் ரூ.68 லட்​சத்து 32,582 கைமாறி​யிருப்​பது கண்​டறியப்​பட்​ட​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “டிஜிட்​டல் பரிவர்த்​தனை பாது​காப்​பானது. இந்த வகை​யில் லஞ்​சம் பெற்​றால் கண்​டு​பிடிக்க முடி​யாது என்ற தவறான நம்​பிக்கை சிலரிடம் உள்​ளது. ஆனால், யுபிஐ பரிவர்த்​தனை​கள் ஒவ்​வொன்​றுக்​கும் தேதி, நேரம், தொகை, அனுப்​பிய​வர், பெற்​றவர், வங்கி விவரங்​கள் என முழு​மை​யான டிஜிட்​டல் தடயங்​கள் இருக்​கும். செல்​போன்​கள், வங்கி கணக்​கு​கள் மற்​றும் பரிவர்த்​தனை வரலாறுகளை ஆய்வு செய்​வதன் மூலம், பணம் எந்த வழி​யில் யாரிடம் சென்​றது என்​பதை எளி​தாகக் கண்​டறிய முடிகிறது” என்​றனர்.

சிலர் தங்​கள் சொந்த வங்​கிக் கணக்​கு​களைப் பயன்​படுத்​தாமல், உறவினர்​கள் அல்​லது நண்​பர்​களின் யுபிஐ கணக்​கு​களை பயன்​படுத்​து​வ​தாக​வும் கூறப்​படு​கிறது. இருப்​பினும், பணத்​தின் பரி​மாற்​றச் சங்​கி​லியை முழு​மை​யாக ஆய்வு செய்​யும் தொழில்​நுட்ப வசதி​கள் தற்​போது விசா​ரணை அமைப்​பு​களிடம் இருப்​ப​தால், இத்​தகைய பரிவர்த்​தனை​களும் விரை​வில் வெளிப்​பட்டு விடும் என அதி​காரி​கள் சுட்​டிக்​காட்​டு​கின்​றனர்.

டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை​கள் தற்​போது எளிமை​யாகி​யுள்ள நிலை​யில், அதே தொழில்​நுட்​பத்தை ஊழலுக்​குப் பயன்​படுத்​தும் போக்கு அதி​கரித்​திருப்​பது கவலை அளிக்​கிறது. ஆனால், அந்த டிஜிட்​டல் தடங்​களே தற்​போது லஞ்​ச ஒழிப்​புத்​ துறைக்​கு முக்​கிய ஆதா​ரங்​களாக மாறி​யுள்​ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply