இந்திய அளவில் தொழிற்சாலைகளில் எண்ணிக்கையில் முதல் மாநிலமாக இருக்கும் தமிழகத்தில் , மேலும் தொழில் முதலீடுகளை அதிகரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.
பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்ட நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஆகஸ்ட் 22-ம் தேதி அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை துணை முதலமைச்சர் ஆகலாம் என்று மீண்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சுதந்திர தினத்திற்கு பிறகு ஓரிரு நாளில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.