வார விடுமுறையை ஒட்டி, தமிழகத்தில் இன்று முதல் 28-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று திருவண்ணாமலை,மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதேப்போல், சென்னை கோயம்பேட்டில் இருந்து, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் தலா 65 பேருந்துகள் இயக்கப்பட நிலையில், பெங்களூரு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.