ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய கிரிக்கெட் அணி செப்.28-ல் முதல் ஆட்டத்தில் மோதுகிறது

Priya
780 Views
1 Min Read

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.28-ம் தேதி களமிறங்குகிறது.

ஆசிய விளையாட் போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் வரும் செப்டர்பர் 20 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறுகிறது. இதில் ஆடவர் கிரிக்கெட்டில் இந்திய அணி நேரடியாக கால் இறுதி சுற்றில் களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டம் செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறுகிறது. அதேவேளையில் இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தை செப்டம்பர் 18-ம் தேதி விளையாடுகிறது.

இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தரவரிசையில் முன்னிலை வகிப்பதால், காலிறுதிச் சுற்றிலிருந்தே தங்கள் போட்டிகளைத் தொடங்குகின்றன. சீனாவில் கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இரு பிரிவிலும் இந்திய அணிகள் தங்கப் பதக்கம் வென்றிருந்தது.

இம்முறையும் இந்த ஆதிக்கம் தொடரக்கூடும். இம்முறை இந்திய ஆடவர் அணி ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது. அதே வேளையில் இந்திய மகளிர் அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் விளையாட உள்ளது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply