லண்டனில் முதல்வர் விஜய்க்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு: அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை இன்று தொடங்கி வைக்கிறார்

Priya
871 Views

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் அரசு முறை பயணமாக லண்டன் சென்ற முதல்வர் விஜய்க்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் தமிழகத்துக்கான புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் விஜய் நேற்று முன்தினம் இரவு 10.05 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

துபாய் வழியாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு இந்திய நேரப்படி நேற்று காலை 11.30 மணிக்கு அவர் சென்றடைந்தார். முதல்வரின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

6 நாட்கள் லண்டனில் தங்க வுள்ள முதல்வர் விஜய், முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முன்னணித் தொழிலதிபர் களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

அஜித் பங்கேற்கும் கார் பந்தயம் மேலும், நடிகர் அஜித் பங்கேற்கும் உலகப் புகழ்பெற்ற கார் பந்தயமான ‘சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ நிகழ்வை அவர் தொடங்கி வைத்து, அஜித்தைச் சந்தித்து பேச உள்ளார்.

மாநிலத்தில் உயர் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதை இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் ரூ.8,491 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்மொழிந்துள்ளன. இதன்மூலம் 5,690 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, முதல்வர் பயணம் செய்த எமிரேட்ஸ் ‘யுஏஇ547’ விமானத்தை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக் கானோர் ‘டிராக்’ செய்துள்ளனர். இதனால், ‘ஃபிளைட் ரேடார்’ இணையதளத்தில் உலகளவில் அதிகளவில் ‘டிராக்’ செய்யப்பட்ட விமானப் பட்டியலில் இது முதலிடத்தைப் பிடித்தது.

முன்னதாகத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அவர் பயணம் செய்த தனி விமானம் அதி களவில் ‘டிராக்’ செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply