சென்னை கிண்டியில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

Priya
711 Views
2 Min Read

சென்னை கிண்டியில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ரூ.67,452 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஒப்பந்தங்கள் மூலம் 1,06,998 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 100 நாட்களுக்குள் தவெக அரசு ஒரு லட்சம் கோடிக்கு மேல் தொழில்துறையில் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமாகிறது.

முதலமைச்சர் முன்னிலையில் இந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அக்னி கோல் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. டைட்டன் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மின் வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வைலட் தமிழகத்தில் ரூ.777 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

கேப்லின் குரூப் நிறுவனம் ரூ.925 கோடியில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. ஜே.கே. டயர்ஸ் ரூ.5,143 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தூத்துக்குடியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.250 கோடி ஸ்கை ரூட் முதலீடு செய்கிறது. ரூ.1000 கோடியில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீடு செய்தவற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரூ.400 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலை தரும் வகையில் தூத்துக்குடியில அக்னிகுல் காஸ்மோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த FORTUNE நிறுவனம் 4,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.477 கோடி முதலீடு செய்கிறது. ஜப்பானின் YKK நிறுவனம் திருவள்ளூரில் ரூ.1651 கோடி முதலீட்டில் 4,316 பேருக்கு வேலை தரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஷைலி என்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தமிழகத்தில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளது.

ஆஸி.ன் Avid Group திருவள்ளூர், தூத்துக்குடியில் ரூ.7000 கோடி முதலீட்டில் 12,000 பேருக்கு வேலை தரும் வகையில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான BIZER தமிழகத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. WOWsemi நிறுவனம் கோவையில் செமிகண்டக்டர் துறை திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

அடுத்த 2 ஆண்டில் ரூ.75 கோடி முதலீட்டில் Wafer on Wheels அனுபவ மையம், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து, 15,000 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் பணி பெற்றோருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply