மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: முழு உண்மையை வெளிப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

Priya
614 Views
1 Min Read

மின்​வாரி​யத்​தின் மின்​மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்த குற்​றச்​சாட்​டின் முழு உண்​மையை தமிழக அரசு வெளிப்​படுத்த வேண்​டும் என்று தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தின் ஒவ்​வொரு குடும்​ப​மும் மின்​கட்டண சுமையை சுமந்து கொண்​டிருக்​கிறது.

ஆனால், அதே மின்​வாரி​யத்​தின் மின்மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்​துள்ள குற்​றச்​சாட்டு மக்​களை அதிர்ச்​சி​யடையச் செய்​துள்​ளது.

இந்த விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணை நடை​பெறும் நிலை​யில், மக்​களின் பணம் யாருடைய லாபத்​துக்​காக பயன்​படுத்​தப்​பட்​டது? என்ற கேள்விக்கு தமிழக அரசு தெளி​வான பதில் அளிக்க வேண்​டும்.

குற்​றச்​சாட்டு உண்​மையென நிரூபிக்​கப்​பட்​டால், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் யாராக இருந்​தா​லும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும். அரசுக்கு ஏற்​பட்ட இழப்​பும் முழு​மை​யாக மீட்​கப்பட வேண்​டும்.

எனவே, ரூ.397 கோடி குற்​றச்​சாட்​டின் முழு உண்​மை​யை​யும் தமிழக அரசே மக்​களுக்கு வெளிப்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் அவர் தெரி​வித்​துள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply