கோயில் சொத்து ஆக்கிரமிப்பு: காவல்துறையில் புகாரளித்து எஃப்ஐஆர் பதிய அதிகாரிகளுக்கு அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தல்

Priya
577 Views
1 Min Read

இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள், சட்டப் பேரவை அறிவிப்புகள், கோயில் திருப்பணிகள் உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: அனைத்து கோயில்களிலும் நேர்மையான, வெளிப்படையான, பொறுப்புமிக்க நிர்வாகம் உறுதி செய்யப்பட வேண்டும். கோயில் நிலங்கள் மற்றும் சொத்துகளில் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத பெயர் மாற்றம் அல்லது உரிமை கோரும் முயற்சிகளை அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காவல்துறையில் புகார் அளித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்.

கோயில்களில் தரிசன அனுமதி உள்ளிட்ட விதிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யும்போது தலைமையிடத்துக்கு தெரிவிக்க வேண்டும். கும்பாபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கோயிலில் வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதிக்கக் கூடாது. அனைத்து அதிகாரிகளும் தினமும் காலை – மாலையில் கோயில்களுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கோயில்களில் பணியாற்றி பணிக்காலத்தில் உயிரிழந்த 5 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply