பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான கட்டணம் கடைசியாக 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணப்படி ஆரம்ப 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25, அதன்பின் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால், இந்த காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 2013-ம் ஆண்டில் லிட்டருக்கு ரூ.65 முதல் ரூ.70 வரை இருந்த பெட்ரோல் விலை தற்போது ரூ.100-ஐ தாண்டி உயர்ந்துள்ளது. அதேபோல் சிஎன்ஜி. எரிபொருள் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
ஆரம்ப கட்டணத்தை ரூ.40 ஆகவும், ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 ஆகவும் நிர்ணயிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.
மேலும், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்குஒருமுறை எரிபொருள் விலை உயர்வின் அடிப்படையில் கட்டணத்தை தானாக மறுஆய்வு செய்யும் நடைமுறையைஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

