காவல், தீயணைப்​புத் துறைக்கு ரூ.165 கோடி​யில் புதிய கட்டிடங்கள்: முதல்​வர் விஜய் திறந்து வைத்தார்

Priya
760 Views
1 Min Read

காவல், தீயணைப்​புத் துறை​களுக்கு ரூ.164.64 கோடி​யில் கட்​டப்​பட்ட கட்​டிடங்​களை முதல்​வர் விஜய் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மாநிலத்​தின் அமை​தி​யைப் பேணிப் பாது​காத்​து, சட்​டம் – ஒழுங்​கைப் பராமரிக்​கும் முக்​கிய பணி​களை ஆற்​றிவரும் காவல் துறை​யின் பணி​கள் சிறக்​க​வும், தீயணைப்​புத் துறை​யின் செயல்​திறன் மேம்​பட​வும், அத்​துறை​களின் உள்​கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்த பல்​வேறு திட்​டங்​களை அரசு செயல்​படுத்தி வரு​கிறது.

அந்த வகை​யில், செங்​கல்​பட்டு மாவட்​டம் பெரும்​பாக்​கத்​தில் ரூ.121.85 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள 400 காவலர், தலை​மைக் காவலர் குடி​யிருப்​பு​கள், சென்னை துறை​முகத்​தில் ரூ.2.91 கோடி​யில் கட்​டப்​பட்ட காவல் நிலை​யம், சென்னை ஆவடி தமிழ்​நாடு சிறப்பு காவல் 5-ம் அணி வளாகம், புனித தோமையர் மலை, காஞ்​சிபுரம் ஆயுதப்​படை வளாகங்​களில் தலா ரூ.1 கோடி​யில் கட்​டப்​பட்ட காவலர் பல்​பொருள்

அங்​காடிகள் என ரூ.127.76 கோடி​யில் கட்​டப்​பட்ட காவல் துறை கட்​டிடங்​களை முதல்​வர் விஜய் நேற்று காணொலி​யில் திறந்து வைத்​தார்.

தீயணைப்​புத் துறை

சேலம் – செவ்​வாய்ப்​பேட்​டை, திருச்சி – சமயபுரம், நாமக்​கல் – வெப்​படை, மதுரை தே.கல்​லுப்​பட்​டி, வாடிப்​பட்​டி, சிவகங்கை – சிங்​கம்​புணரி, பெரம்​பலூர் மாவட்​டம் ஆகிய பகு​தி​களில் 7 தீயணைப்பு நிலை​யங்​கள், கோவை – பீளமேடு, மேட்​டுப்​பாளை​யம், நாமக்​கல் – திருச்​செங்​கோடு பகு​தி​களில் ரூ.36.88 கோடி​யில் கட்​டப்​பட்ட குடி​யிருப்பு கட்​டிடங்​களை​யும் முதல்​வர் திறந்து வைத்​தார்.

இந்த நிகழ்ச்​சி​யில் தலை​மைச் செயலர் சாய்​கு​மார், உள்​துறைச் செயலர் க.மணி​வாசன், டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால், தீயணைப்​புத் துறை இயக்​குநர் ஜி.வெங்​கட​ராமன், காவலர் வீட்​டு​வசதி கழகத்​தின் தலை​வர் வினித் தேவ் வான்​கடே, சென்னை காவல் ஆணை​யர்​ அமல்​ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply