உக்ரைன் மீதான ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் திட்டத்தை தடுத்தவர் பிரதமர் மோடி: போலந்து வெளியுறவு அமைச்சர் புகழாரம்

Priya
5 Views
1 Min Read

உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணு ஆ​யுதங்​களை பயன்​படுத்​து​வதைத் தடுத்​த​தில் இந்​தி​யப் பிரதமர் நரேந்​திர மோடி மிக முக்​கியப் பங்​காற்​றி​னார் என்ற போலந்து நாட்​டின் வெளி​யுறவுத்​துறை இணை​யமைச்​சர் விளாடிஸ்லா பரபரப்பு தகவல் ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார்.

இதுகுறித்து செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பின்​போது பார்​டோசெவ்​ஸ்கி கூறிய​தாவது: சர்​வ​தேச அளவில் ரஷ்ய அதிபர் புதின் மீது செல்​வாக்கு செலுத்​தக்​கூடிய மிகச் சில உலகத் தலை​வர்​களில் இந்தியப் பிரதமர் மோடி​யும் ஒரு​வர். மோடியின் கருத்​துகளுக்கு ரஷ்ய அதிபர் மிகுந்த முக்​கி​யத்​து​வம் அளிப்​பவர்.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் உக்​ரைன் மீது ரஷ்யா தனது முழு அளவி​லான ராணுவத் தாக்​குதலைத் தொடங்​கியது. இந்​தப் போர் தீவிரமடைந்த நிலை​யில், அவ்​வாண்​டின் இறு​தி​யில் உக்​ரைனுக்கு எதி​ராக அணு ஆ​யுதங்​களைப் பயன்​படுத்த ரஷ்யா திட்​ட​மிட்​ட​தாக சர்​வ​தேச அளவில் பரவலான அச்​சம் நில​வியது.

இத்​தகைய இக்​கட்​டான சூழலில்​தான், போர் தீவிரமடைவதைத் தடுக்​கப் பிரதமர் மோடி திரைமறை​வில் முக்​கிய தூதரக நடவடிக்கைகளை மேற்​கொண்​டார்.குறிப்பாக உக்​ரைனில் ரஷ்யா அணு ஆ​யுதங்​களைப் பயன்​படுத்​து​வதைத் தடுத்து நிறுத்தி​ய​தில் பிரதமர் மோடி ஆற்​றிய பங்கை நான் இங்கே சுட்டிக்​காட்ட விரும்​பு​கிறேன். எனவே, ரஷ்​யா- உக்​ரைன் மோதலை முடிவுக்​குக் கொண்டு வர இந்​தியா தனது செல்வாக்கைப் பயன்​படுத்த முடியும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply