ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு இடைக்கால ஓய்வூதியம்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Priya
72 Views
1 Min Read

உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் உள்ள ஓய்​வு​பெற்ற 46 ஆயிரம் பேருக்கு இடைக்​கால ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என இந்​திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் 2003 ஏப்​.1-ம் தேதி​முதல் பணி​யில் சேர்ந்து 2025 டிச.31-ம் தேதிவரை ஓய்​வு​பெற்ற உறுதி அளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் வரக்​கூடிய ஊழியர்​கள் 46 ஆயிரம் பேர் உள்​ளனர். அவர்​களுக்கு ஓய்வூதியம் வழங்​கப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில் அவர்​களுக்கு இடைக்​கால ஓய்வூதியம் வழங்​கு​வதற்​காக கடந்த 2025 ஜூன் 16-ல் அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது. அதன் அடிப்​படை​யில் 2026 ஜனவரி 1 முதல் இடைக்​கால ஓய்​வூ​தி​ய​மாக அவர்​களுக்கு ரூ.10 ஆயிரம்வழங்​கப்பட வேண்​டும்.

ஆனால் ஓய்​வு​பெற்ற 46 ஆயிரம் பேருக்​கும் இந்த இடைக்​கால ஓய்​வூ​தி​யம் இது​வரை வழங்​கப்​பட​வில்​லை. ஓய்​வூ​தி​யம் என்​பது சலுகையல்ல; அது உரிமை.

தங்​களது கடந்த காலஉழைப்பு சக்​தியை இச்​சமூகத்​துக்கு வழங்​கிய​வர்​களுக்​கு, சமூக பொருளா​தார பாது​காப்பை வழங்க வேண்​டியது இந்த சமூகத்​தின் கடமை​யாகும். ஊழியர்​களின் கண்​ணி​ய​மான வாழ்​வுக்கு ஓய்​வூ​தி​யம் அவசி​யம் எனவும் உச்ச நீதி​மன்​றம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

எனவே தமிழக அரசு, 2003 ஏப்​ரல் 1 முதல் பணி​யில் சேர்ந்​து, 2025 டிச.31 வரை ஓய்​வு​பெற்ற அனை​வருக்​கும், இடைக்​கால ஓய்​வூ​தி​யமானரூ.

10,000-ஐ மாதந்​தோறும் வழங்க வேண்​டும் இத்துடன் இந்த பணி​யாளர்​களில் உயி​ரிழந்த 7,864 பேரின் இணை​யர்​களுக்கு குடும்ப ஓய்​வூ​தி​யத்தை வழங்​க​வும், பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை மீண்​டும் நடை​முறைப்​படுத்​த​வும் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply