பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.8 லட்சம் நிவாரண நிதி: அமைச்சர் குமார் வழங்கினார்

Priya
52 Views
2 Min Read

கும்​மிடிப்​பூண்டி அருகே புதுப்​பேட்​டை​யில் பாலியல் வன்​கொடுமை செய்து கொலை செய்​யப்​பட்ட 3 வயது பெண் குழந்​தை​யின் குடும்​பத்​துக்கு அரசு சார்​பில்​, ரூ.8 லட்​சம் நிவாரண நிதிக்​கான ஆணையை நேற்​று செயற்கை நுண்​ணறிவு துறை அமைச்​சர் குமார் வழங்​கி​னார்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் தொழிற்​பேட்​டையையொட்​டி​யுள்ள புதுப்​பேட்டை பகு​தி​யில் கடந்த 14-ம் தேதி மாலை, வீட்டு வாசலில் விளை​யாடி கொண்​டிருந்த பிஹார் மாநில தம்​ப​தி​யின் 3 வயது பெண் குழந்தை திடீரென காணா​மல் போனது. நீண்ட நேர தேடு​தலுக்​குப் பிறகு அந்தக்குழந்தை, பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டு, அங்​குள்ள முட்​புதரில் வீசப்​பட்​டிருந்​தது தெரிய வந்​தது.

இதனால், அதிர்ச்​சி​யடைந்த பெற்​றோர் குழந்​தையை மீட்டு சிகிச்​சைக்​காக கும்​மிடிப்​பூண்டி அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்​கப்​பட்ட பின் மேல் சிகிச்​சைக்​காக சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட நிலை​யில், நேற்று முன் தினம் காலை அந்​தக் குழந்தை உயி​ரிழந்​தது.

இச்​சம்​பவம் தொடர்​பாக, கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் போலீ​ஸார் போக்​சோ, கொலை உள்​ளிட்ட 4 சட்​டப்​பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்து நடத்​திய விசா​ரணை​யில், புதுப்​பேட்டை பகு​தி​யில் தங்​கி​யிருந்த பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்த பிப்​பின் மான்ஜி (19) என்ற இளைஞர், வீட்டு வாசலில் விளை​யாடிக் கொண்​டிருந்த குழந்​தையை பிஸ்​கட் கொடுத்து அழைத்து சென்று பாலியல் வன்​கொடுமை​யில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, பிப்​பின் மான்​ஜி, சென்​னை, புழல் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில், குழந்​தை​யின் பெற்​றோரை நேற்று கும்​மிடிப்​பூண்டி ஊராட்சி ஒன்​றிய அலு​வல​கத்​தில், அமைச்​சர் ரா.குமார் சந்​தித்​து, ஆறு​தல் கூறி​னார்.

முதல்வர் விஜய் வருத்தப்பட்ட தகவலையும் தெரிவித்தார். பிறகு, அவர், மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தின் உத்​தர​வின் பேரில், தமிழக அரசின் குழந்​தைகள் நலன், சிறப்பு சேவை​கள் துறை சார்​பில், குழந்​தை​யின் குடும்​பத்​தினரிடம் ரூ.8 லட்​சம் நிவாரண நிதிக்​கான ஆணையை வழங்​கி​னார்.

இந்​நிகழ்​வின்போது, திரு​வள்​ளூர் ஆட்​சி​யர் கவி​தா, பொன்​னேரி சார் ஆட்​சி​யர் அப்​துல்​ராசிக், மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு நல அலு​வலர் நிஷாந்​தினி, துணை ஆட்​சி​யர் சண்​முக பிரீத்​தா, கும்​மிடிப்​பூண்​டி எம்​எல்​ஏ எஸ்​.​விஜயகு​மார்​ உள்​ளிட்​டோர்​ உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply