காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீநிதி மோகன், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
காங்கிரஸ் தேசிய இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீநிதி மோகன், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்த ஸ்ரீநிதி மோகன், அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

