முதல்வர் விஜய் பிரச்சாரம் தொழுப்பேடுக்கு மாற்றம்

Priya
902 Views
1 Min Read

மது​ராந்​தகம் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் மரகதம் குமர​வேலை ஆதரித்​து, வரும் 25-ம் தேதி முதல்​வர் விஜய் பிரச்​சா​ரத்​தில் ஈடு​படும் இடம் பாது​காப்பு காரணங்​களுக்​காக அச்​சிறுப்​பாக்​கத்​தில் இருந்து தொழுப்​பேடுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மது​ராந்​தகம் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழக வேட்​பாள​ராக மரகதம் குமர​வேல் போட்​டி​யிடு​கிறார் இவரை ஆதரித்து அக்​கட்​சி​யின் தலை​வரும் தமிழக முதல்​வரு​மான விஜய், வரும் 25-ம் தேதி அச்​சிறுப்​பாக்​கம் பகு​தி​யில் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட​விருந்​தார்.

இந்​நிலை​யில் பாது​காப்பு காரணங்​களுக்​காக தற்​போது பிரச்​சா​ரம் வேறு பகு​திக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. இதன்​படி தொழுப்​பேடு பகு​தி​யில் திருச்​சி-சென்னை செல்​லும் தேசிய நெடுஞ்​சாலையை ஒட்டி சுமார் 40 ஏக்​கருக்​கும் மேல் பரப்​பளவு கொண்டு இடத்​தில் மேடை அமைக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்பட உள்​ள​தாக தெரி​கிறது.

மேலும் இந்த பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் மது​ராந்​தகம் தொகு​தி​யைச் சேர்ந்த நபர்​களை மட்​டுமே அனு​ம​திக்க உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இதற்​காக, அக்​கட்​சி​யினர் மூலம் ஆதார் எண் திரட்​டப்​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது.

பாது​காப்பு காரணங்​கள் மற்​றும் ஏராள​மானோர் வரக்​கூடும் என்​ப​தால் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அக்​கட்சி வட்​டாரங்​களில் கூறப்​படு​கிறது. இதனால் தொழுப்பேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply