“தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்” – ‎ப.சிதம்பரம்

Priya
794 Views
1 Min Read

“‎வாக்கு திருட்டு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ‎ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.

‎சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 5 விளக்கு பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மிகப்பெரிய சதி. அது ஜனநாயக விரோதமான செயல். 13.30 கோடி பேரை வாக்களிக்க விடாமல் செய்து வாக்குத் திருட்டு தானே? வாக்கு திருட்டை கண்டித்து ராகுல் காந்தி போராடுகிறார். இதில் ராகுல் காந்தி கரத்தைப் பலப்படுத்துவோம்.

‎‎வாக்கு திருட்டு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நிறுத்த வேண்டும். நீக்கப்பட்ட 13.30 கோடி பேரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.” என்று ப.சிதம்பரம் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply