வருமானவரி அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: செந்தில் பாலாஜியின் தம்பி கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்

Priya
44 Views
1 Min Read

அப்​போது அதி​காரி​களை தடுத்து நிறுத்​தி, அவர்​கள் வந்த வாக​னத்தை சேதப்​படுத்​தி​யதுடன், பெண் அதி​காரி ஒரு​வரை முற்​றுகை​யிட்டு தாக்​கிய​தாகக் கூறி கரூர் நகர போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்த வழக்​கின் விசா​ரணைக்​காக போலீ​ஸார் அண்​மை​யில் அசோக்​கு​மாரை தேடி சென்னை எம்​ஆர்சி நகரில் உள்ள அவரது வீட்​டுக்​குச் சென்​றனர். இதையடுத்​து, அசோக்குமார் உள்பட 100-க்​கும் மேற்​பட்ட திமுகவினர் முன்​ஜாமீன் பெற்​றனர்.

இதனிடையே முன்​ஜாமீன் நிபந்​தனை​யின்​படி கரூர் விரைவு நீதி​மன்ற நீதிபதி மகேஷ் முன்​னிலை​யில் நேற்று ஆஜரான அசோக்​கு​மார், பிணை உத்​தர​வாதம் அளித்​துவிட்டு திரும்​பி​னார். அவருடன் அரவக்​குறிச்சி எம்​எல்ஏ இளங்கோ, கரூர் மாநகராட்சி மண்​டலக் குழுத் தலை​வர் எஸ்​.பி.க​னக​ராஜ், தி​முக நிர்​வாகி​கள் மற்​றும் வழக்​கறிஞர் விஜயகு​மார்​ உள்​ளிட்​டோர்​ வந்​திருந்​தனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply