‘அண்ணன் சீர்’ திட்டத்தில் தங்க நாணயம், பட்டுப்புடவை யாருக்கு கிடைக்கும்? – அரசின் நிபந்தனைகள் வெளியீடு

Priya
980 Views
1 Min Read

தமிழக அரசின் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த நிதி அனுமதியை வழங்கி சமூக நலத்துறை செயலர் ம.பல்லவி பல்தேவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழகத்தில் திருமண மாகும் மணப்பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டு புடவையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு வழங்குமாறு அரசை சமூக நல இயக்குநர் கோரியுள் ளார்.

அவரது கருத்துருவை பரிசீலனை செய்து, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள மணப்பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தங்க நாணயமும், பட்டுப்புடவையும் வழங்கும் வகையில், திட்டத்தை செயல் படுத்த நிர்வாக அனுமதியும், இதற்கான தொகையாக நடப்பு நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ.812 கோடிக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது.

இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல், நடைபெறும் திருமணங்களுக்கு இத்திட்டம் பொருந்தும். இதற்கென விரைவில் பிரத்யேக இணையதளம் தொடங்கப்படும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவெக தேர்தல் வாக்குறுதியில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு அண்ணன் சீர் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வருமான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply