புது டெல்லி;
தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) இன்று(அக்06) காலை முதல் நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் 22 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக NIA-விடம் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் மற்றும் அமைப்புகள் விசாரணையில் உள்ளன.
இந்தச் செயலியில் அடுத்து என்ன சதிகள் திட்டமிடப்படுகின்றன? அல்லது என்ன இணைப்புகள் செய்யப்படுகின்றன? என்ற விவரங்களையும், முக்கிய ஆதாரங்களையும் சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் இந்த சோதனை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு மற்றும் அதன் கூட்டாளிகளை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.