ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 15, 2023 அன்று, தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை நிதித் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டம் தொடங்குவதற்கு முன்பே தமிழக அரசு புதிய ரேஷன் கார்டு வழங்குவதை நிறுத்தி விட்டது.
மேலும் இதுவரை தமிழகத்தில் 2,24,13,920 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ள நிலையில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 2,81,000 பயனாளிகள் காத்திருக்கின்றன.
கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் முதல் வாரம் வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் புதிய ரேஷன் கார்டுகள் பரிசீலிக்கப்பட்டும், அதை பயனாளிகளுக்கு வழங்க முடியவில்லை.
இந்நிலையில், அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.