அமெரிக்கா​விலும் விரை​வில் அறிமுகமாகிறது யுபிஐ

Priya
599 Views
1 Min Read

இந்தியா​வின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பான ‘யுபிஐ’ விரை​வில் அமெரிக்​கா​விலும் அறிமுகம் செய்யப்பட உள்​ளது. இதன் மூலம் அங்கு வசிக்​கும் இந்​தி​யர்​கள் தங்கள் உறவினர்களுக்​குப் பணம் அனுப்​புவது இன்​னும் எளிதாகும். அமெரிக்​கா​வின் பாங்க் ஆஃப் அமெரிக்​கா, தனது பணப்​பரிவர்த்​தனை செயலி​யான ‘ஜெல்’ அமைப்பை இந்தியாவின் ‘யுபிஐ’ உடன் இணைப்​ப​தற்​கான முதற்​கட்ட சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கிறது.

இது தொடர்​பாக அமெரிக்​கா​வில் உள்ள இந்​தி​யத் தூதரகம் செப்டம்​பர் 9-ம் தேதி வெளி​யிட்ட பதி​வில், “இரு நாடு​களுக்​கும் இடையி​லான பணப்​பரிவர்த்​தனையை எளி​தாக்க பாங்க் ஆஃப் அமெரிக்​கா​வின் ஜெல் மற்​றும் யுபிஐ இடையி​லான இணைப்பை ஏற்​படுத்த முயற்சி நடை​பெற்று வரு​கிறது” என்று கூறப்பட்டுள்ளது. 2026 இறு​திக்​குள் இந்த சேவை பயன்​பாட்​டுக்கு வரும் என்​று ஜெல் நெட்​வொர்க்கை இயக்​கும் ‘ஏர்லி வார்​னிங் சர்வீசஸ்’ நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply