தூத்துக்குடி மாவட்டம் குறிப்பன்குளத்தில் கடந்த ஆகஸ்ட் 31-ந்தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று இயக்குனர் மாரி செல்வராஜ் வெடி விபத்தில் உயிரிழந்த, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளத்தைச் சேர்ந்த முத்துக்கண்ணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக நேரில் வருகை தந்தார்.
முத்துக்கண்ணன் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அதைத் தொடர்ந்து விபத்தில் பலியான மற்ற மூவரின் வீடுகளுக்கும் சென்று 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.