தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் 2023-24 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை அளித்துள்ளன

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் முன்னேற்றம் குறித்து,பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கிறது.

தென் மாநிலங்களின் வளர்ச்சி!

தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானத்தில் தென் மாநிலங்கள் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டியுள்ளது என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள்;

மகாராஷ்டிரா 13.3 சதவீதத்துடன் முதலிடத்திலும்,
ஆந்திரா 9.7 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் மற்றும்,
தமிழ்நாடு 8.9 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அசல் 15% இலிருந்து 13.3% ஆக குறைந்து. அதேசமயம், மகாராஷ்டிராவில் தனிநபர் வருமானம் 150.7% அதிகரித்துள்ளது.

வட மாநிலங்களின் சில பகுதிகள் மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில்,
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது.

கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி நிலை;

மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன. அதாவது 1961ல் 10.5 சதவீதமாக இருந்த மேற்கு வங்கத்தின் மொத்த உற்பத்தி இன்று 5.6 சதவீதமாக குறைந்துள்ளது.

மேற்கு வங்கத்திலும் தனிநபர் வருமானம் குறைந்து வருகிறது. தனிநபர் வருமானம் 127.5% ஆக இருந்தது, தற்போது 83.7% ஆக குறைந்துள்ளது. இது ராஜஸ்தான், ஒரிசா போன்ற பின்தங்கிய மாநிலங்களைக் காட்டிலும் குறைவு. மேற்கு வங்கம் கடந்த சில தசாப்தங்களாக தொடர்ச்சியான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.

தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் மற்ற நாடுகள் எவ்வாறு ஒப்பிடுகின்றன?

டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா, ஹரியானா ஆகிய மாநிலங்களும் தனிநபர் வருமானத்தில் முன்னேறி வருகின்றன.

பீகாரிலும் தனிநபர் வருமானம் குறைவாக உள்ள நிலையில், 2023ல் டெல்லியின் தனிநபர் வருமானம் 250.8% ஆக இருக்கிறது. சராசரி வருமானத்தைப் பொறுத்தவரை, இந்தத் தொகை தேசிய சராசரியை விட 2.5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here