இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தின் 171-வது படமான ‘கூலி’யை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து அவர் இயக்கும் அடுத்த படத்தில் இந்தி நடிகர் அமீர்கான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைப் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.