நடிகர் சூரி -கூழாங்கல் பட இயக்குனர் வினோத் ராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கொட்டுக்காளி. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில், இப்படம் ரிலீசுக்கு முன்னதாக பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் சூரி ஹிரோவாக நடித்திருந்த விடுதலை படம் வெளியாகி அவருக்கு சிறப்பான ஹீரோ இமேஜை கொடுத்திருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான கருடன் படமும் அந்த லிஸ்டில் இணைந்து கொண்டது. இந்நிலையில் சூரி ஹிரோவாக நடித்து மூன்றாவது படமாக கொட்டுக்காளி படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தை பார்த்த கமல்ஹாசன்,படத்தில் சூரியை தவிர வேறு தெரிந்த முகங்கள் இல்லை என்றும் , 3 நிமிடங்களுக்கு பிறகு அவரும் தெரியவில்லை. பாண்டியன் என்ற கேரக்டர் மட்டுமே தெரிந்தார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். பின்னணி இசை என்று எதுவும் இல்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ள கமல்ஹாசன், இயற்கைதான் படத்தின் இசை என்பதையும் பாராட்டியுள்ளார்.