இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ள, ‘கங்குவா’ படத்தில், சூர்யா முதல் இப்படத்தில் நடித்துள்ள முக்கிய பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
நடிகர் சூர்யா, இதுவரை ஏற்று நடித்திராத பல்வேறு கெட்டப்பில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. புராண காலத்து கதை முதல்… தற்கால கதை முதல்கொண்டு… அணைத்து வயதிரையும் கவரும் விதத்தில் ஃபேண்டஸி படமாக இப்படத்தை இயக்கி உள்ளார் சிறுத்தை சிவா.
மேலும் இப்படத்தை K. E. ஞானவேல் ராஜா மற்றும் V. வம்சி கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தின், டப்பிங் பணிகள் சமீபத்தில் துவங்கிய நிலையில்… படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
அந்த வகையில், கங்குவா படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுளளது. 5 வேடங்களில் வந்து ரசிகர்களை மிரள வைக்க தயாராக இருக்கும் சூர்யா, இப்படத்திற்காக 30 முதல் 40 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
நடிகர் ரவி ராகவேந்திரா கங்குவா படத்தில் நடிக்க 15 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து, இப்படத்தின் ஹீரோயினான திஷா பதானி கங்குவா படத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யாவுக்கு நிகரான வேடத்தில் நடித்துள்ள பாபி தியோல் இப்படத்தில் நடிக்க 3 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளார். நடிகர் யோகி பாபுவுக்கு 60 லட்சம் ரூபாயையும், ரெடின் கிங்ஸ்லிக்கு 30 லட்ச ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
கங்குவா படத்தில் நடிக்க நடிகை கோவை சரளா 25 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். நடிகர் ஆனந்தராஜ் 20 லட்சம் ரூபாயும், நடிகர் ஜெகபதி பாபு 80 லட்சம் ரூபாயும் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.