ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் PET சார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தற்போது ஹிப் ஹாப் ஆதி ‘கடைசி உலகப் போர்’ எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்குவதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.
வரும் 20ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளநிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது ‘கடைசி உலகப் போர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உளள்து .