தமிழ் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி
சமீப காலமாக திகில் திரைப்படங்களில் கவனம் செலுத்தி
வருகின்றார்.
கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான அரண்மனை 4
திரைப்படம் நல்ல வசூலை பெற்றதுடன் மக்கள் மத்தியில்
பெரும் வரவேற்பை பெற்றது. சுந்தர்.சி தற்போது ‘ஒன் 2 ஒன்’
என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சுந்தர்.சி நடிகர் வடிவேலுவை வைத்து புதிய
திரைப்படத்தை இயக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு ‘
கேங்கர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள் கூட்டணியில்
உருவான வின்னர், கிரி, நகரம் படங்களின் நகைச்சுவை
காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகின்றது.