இப்போ பிக் பாஸ்-ல என்ன நிலவரம்-னா பணப்பெட்டி நிலவரம் தான் ஓடிட்டு இருக்கு. அந்த வகைல 80 மீட்டர் தொலைவில் 35 விநாடிகளில் பணப்பெட்டியை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அத எடுக்க ஜாக்குலின் போறாங்க பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பவதாக இருக்கிறது. பிக் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் ஜாக்குலினை வரவேற்பதாக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. ஆனால், ‘ முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்!’ என பிக்பாஸ் சொல்வது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இன்று ரூ. 8 லட்சம் கொண்ட பணப்பெட்டி வைக்கப்பட்ட நிலையில், கொடுக்கப்பட்ட நேரத்தை விட ஜாக்லின் 37 விநாடிகள் எடுத்துக் கொண்டதால் பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் பரவி வருகிறது. பிக் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் ஜாக்லின் வெற்றிப் பெறுவார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்குலின் வெளியேறினாரா அல்லது வெற்றி பெற்றாரா என்பது இனிதான் தெரியவரும்.
பிக் நிகழ்ச்சியில் Finale வரும் 17-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் யார் வெற்றி பெறுவார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். நீங்கள் யார் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?