அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்தும் பேசி வருகிறார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்துக்கு வருகிற 21-ந்தேதி, 22-ந் தேதி என 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு செய்கிறார். இதற்காக 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து காலை 10 மணி அளவில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை வழியாக சிவகங்கை செல்கிறார்.

தொடர்ந்து 21-ந் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 22-ந் தேதி சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு ஏற்கனவே முடிக்கப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here