சென்னையில் சில இடங்களில் இன்று நள்ளிரவு முதல் மழையின் அளவு 20 சென்டிமீட்டரை நெருங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேக கூட்டங்கள் இன்னும் வலுவிழக்கவில்லை என்றும், தொடர்ந்து நகரின் சில பகுதிகளில் லேசான தூறல், சாரல் என கனமழை என நீடித்துக் கொண்டே இருக்கிறது எனவும் தெரிவித்துள்ள அவர், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழையின் தீவிரம் அதிகமாகும் என்றும், இந்த பதிவு பயமுறுத்த அல்ல, எச்சரிக்கைக்காக மட்டும் தான் என தெரிவித்த எனவே அலுவலகப் பணிக்கு சென்றவர்கள் சீக்கிரமே வீடு திரும்புங்க என்றும் அவர் எச்சரித்துள்ளார்