உலகமே புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கிற ஆராய்ச்சியில ரொம்ப தீவிரமா ஈடுபட்டுக்கிட்டு இருக்கு.. ஆரம்ப நிலையில இருக்கிற புற்று நோய்க்கு மட்டும்தான் சிகிச்சை கொடுத்து சரி பண்ண முடியும்.. இந்த நிலையில புற்று நோய் குணமாக உ.பி. அமைச்சர் சஞ்சய் சிங் கங்குவார் ஒரு விஞ்ஞானப்பூர்வமான கருத்தை கூறியிருக்காரு.. அதாவது புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பசு தொழுவத்தை சுத்தம் செய்து அங்கேயே படுத்து உறங்கினால் புற்று நோய் குணமாகுமாம்.. அதே போல ரத்த அழுத்த நோயாளிகள் தினமும் காலைலயும் மாலைலயும் பசுவோட முதுகில் செல்லமா தடவிக் கொடுத்தா ரத்த அழுத்தம் 10 நாட்கள்ல பாதியா குறைஞ்சிடுமாம்..
சஞ்சய் சிங் கங்குவாரின் இந்த கருத்து சோசியல் மீடியாவுல பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கு..உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த இந்த சஞ்சய் சிங் கங்குவார் பாஜக அரசில் கரும்பு வளர்ச்சித் துறை அமைச்சரா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.