ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சிலிண்டர் விலையும் கணிசமாக உயரும் அதேபோல் விலை குறைந்தால், சிலிண்டர் விலையும் குறையும்.
ஆனால் தினசரி இந்த மாற்றம் இருக்காது. எனினும் ஒவ்வொரு மாதமும் அந்த வகையில் 1-ந்தேதி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயிக்கும்.
சென்னை பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,809.50 ஆக இருந்த நிலையில், இன்று முதல் 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 1,817 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் 1,817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேப்போல் டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா உள்பட எல்லா நகரங்களிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.