மத்திய பட்ஜெட்டில் ஒரு சில மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் பல மாநில எம்பிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் ‛எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் தமிழக முதல்வர் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி அவர்களே… “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள்.
ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது! அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் உங்களை தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். என்று அவரின் பதிவில் தெரிவித்துள்ளார்.