#பார்த்திபன் வர்ஷினியின் மரண நிமிடங்கள்-9
அடுத்து…
இப்போது.. நீங்களும் நாங்களும் எதிர்பார்த்த வாட்டர் கேம்..
முதலில் நாங்கள் விளையாட நுழைந்தது.. சுரங்கப் பாதையில் பயணிக்கும் வாட்டர் கேம்..
இந்த விளையாட்டில் ஆளாளுக்கு ஒரு ஜோடியை சேர்த்துக் கொள்ள வேண்டும்..
எனக்குதான் ஜோடி இல்லையே.. வழக்கம் போல விகாஷ் என்னுடைய ஜோடியானான்.. பார்த்திபனும் வர்ஷினியும் ஏற்கனவே ஜோடியானதால் அவர்களை பிரிக்கும் எண்ணம் யாரிடமும் இல்லை..
ஜெய்மீயின் ஜோடியாக கிருஸ்டீனா வந்து சேர்ந்தார்.
மதன் சார் மட்டும் தனித்து விடப்பட்டார்..
ஏன் அவர் தனியானார் என்று விசாரித்ததில் காவியா எங்கள் எதிரணியில் கலந்து விட்டது. ஆகவே காவியா வரவில்லை என்பதால் மதன் சாரால் அந்த விளையாட்டை விளையாட முடியவில்லை..
வேறு என்ன செய்வது நாங்கள் மட்டும் அந்த விளையாட்டை விளையாடினோம்.
அந்த விளையாட்டை விளையாண்ட பிறகு.. அதன் தொடர்ச்சியாக டம்ளர் விளையாட்டு.. அதன் பிறகு நீச்சல் குளத்தை நோக்கிப் பயணம்.
அங்குதான் நான், விகாஷ், ஜெய்மீ, கிறிஸ்டினா, பார்த்திபன்,வர்ஷினி,மதன் சார்.. என எல்லாரும் நீச்சலடித்து தண்ணீரில் விளையாடினோம்…
பழைய பாடலை பாடி ஒன்றாக கைதட்டி காமெடி செய்தோம்.. சிறிது நேரம் கழிந்தது.. ஜெய்மீ, கிறிஸ்டீனா, மதன் சார் என எல்லாரும் அடுத்த விளையாட்டை நோக்கி இடம் பெயர்ந்தனர்..
அதற்கடுத்து என்னுடன் விளையாடிக்கொண்டிருந்த விகாஷ், பார்த்திபன், வர்ஷினி எல்லாரும் ஆழத்தை நோக்கி இடம் பெயர்ந்தனர்.. நானோ, நீச்சல் தெரியாத காரணத்தால் ஆழம் குறைவாக இருந்த இடத்தில் நீச்சல் பழகிக் கொண்டிருந்தேன்..
முதல் மூச்சுப் பயிற்சியின் போது தண்ணீரில் விழுந்தேன்.. எழுந்தேன்.. கரையைப் பார்த்தேன்..
முழுவதும் மக்கள் ஜாலியாக நின்றிருந்தார்கள்..
எதிரே வர்ஷினி, பார்த்திபனோடு தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தாள்..
அருகே விகாஷ் அவர்களோடு இருந்தான்..
மறுபடியும் முங்கி எழுந்தேன்..
வர்ஷினி, பார்த்திபன், விகாஷ் எல்லைக் கோட்டினைத் தொட்டு விட்டனர்..
நிமிர்ந்து பார்த்தேன்..
வர்ஷினி ‘வாங்க இங்க’ என்பது போல சைகை செய்தது..
” போ பா.. நான் வரலை.. இதுக்கே தலை சுத்துது.. நீங்க வாங்க மெதுவா..” என சொல்லி விட்டு கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்….
ஜெய்மீயும், கிறிஸ்டீனாவும் அடுத்த விளையாட்டை நோக்கி சென்று விட்டனர்..
நான் கரையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தேன்.
சில நொடிகளில் ஏதோ ஒரு எண்ணத்தில் மறுபடியும் திரும்பினேன்..
”என்னை வாங்க” என அழைத்த வர்ஷினி மரணத்தோடு போராடிக் கொண்டிருந்தாள்.
விகாஷோ.. விடாமல் தண்ணீரில் தப்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்…
பார்த்திபன் அந்த எல்லைக் கோட்டை தேடுவதில் குறியாக இருந்தார்…
இந்த காட்சியைக் கண்ட பிறகு எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை… பதட்டம் கூடியவனாய் மாறிப்போனேன்..
கரையில் நின்றிருந்த மதன் சாரை வாங்க என்று சத்தமாக அழைத்தேன்…
அவரோ நான் குளிப்பதற்காக அழைக்கிறேனோ என்று அவருடைய யூஷுவலான ஸ்டாக் ஸ்மைலிங்கை விட்டு ”நான் வரலை ஆனந்த்.. நீங்க குளிங்க” என்றவாறு சைகை செய்தார்…
அவருக்குப் புரியவில்லை… ”காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கத்தினேன்..” இது சத்தியமாக அங்கிருந்த யாருக்கும் புரிந்திருக்காது…
வேறு வழி அவர்களை காப்பாற்றியாக வேண்டுமே…
ஒரு கட்டத்தில் பதட்டத்தில் கண்ணீர் முட்டியது…
நீச்சலே தெரியாவிடினும்.. அவர்கள் பக்கத்தில் போக முயற்சித்தேன்..
பக்கத்தில் சென்றேன்.. அப்போதுதான் அங்கு லைஃப் கார்டு இருக்கிறார்கள் என்பதே எனக்கு புலனானது…
உடனே… சுத்தமான தமிழில்.. தம்பி..ஆபத்து மாட்டிக்கொண்டார்கள்.. வா.. வந்து காப்பாற்று… என சைகை மொழியில் அவனைப் பார்த்து கூறினேன்…
என் வேண்டுதலைப் பார்த்தவன் உடனே தண்ணீரீல் குதித்தான்..
அதற்குள் விகாஷ் மெல்லமாய் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு என்னைப் பார்த்து கை நீட்டினான்…
எனக்கே நீச்சல் தெரியாது.. இதில் எங்கே போய் அவனைக் காப்பாற்றுவது… ”தம்பி நீயாகவே வந்துவிடு எனக்கு நீச்சல் தெரியாது டா’: என சத்தமாக கத்தினேன்..
” அண்ணா வாங்கனா..” என்றான் விகாஷ்…
அதற்கு மேல் என்ன செய்வது.. தட்டுத் தடுமாறி மெதுவாக ஆழமுள்ள தண்ணீரில் என்னை நிலைநிறுத்தி அவனுக்கு கைநீட்ட.. என் கரங்களைப் பற்றிக் கொண்டு..முன்னேறி வந்துவிட்டான்..
இப்போது.. பார்த்திபன் எல்லைக் கோட்டினைக் கெட்டியாகப்பிடித்துக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்..
உயிருக்கு போராடிய வர்ஷினியை பார்த்தார்..
ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை.. அதற்குள் லைஃப் கார்டு வந்துவிட்டார்..
தன் கையில் இருந்த ஏர் பலூனை வர்ஷினிக்கு அணிவித்தார்.. வர்ஷினியை மெதுவாக மேலே கொண்டு வந்தார்..
என்னிடம் ஒப்பிவித்தார்.. நான் வர்ஷினியின் கரங்களைப் பற்றியவாறு மெதுவாக கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்..
வர்ஷினி மரணத்தை நேருக்கு நேராக பார்த்துவிட்டபடியால் அழுது கொண்டே கரை ஏறினாள்…
நீ பிழைத்து விட்டாய்… அழாதே.. என வர்ஷினியை சமாதனாப்படுத்தி கரையில் ஆசுவாசப்படுத்தி அமர வைத்தேன்..
ஆனால் வர்ஷினியில் அழுகை மட்டும் நிற்கவேயில்லை..
எல்லைக் கோட்டினை கெட்டியாகப் பிடித்தபடி நின்றிருந்த பார்திபனும் மீட்கப்பட்டார்..
பின்பு இருவரும் கரைக்குத் திரும்பினார்கள்..
அதன்பிறகு அங்குவந்து சேர்ந்த ஜெய்மீ,மோகன் சார் கிறிஸ்டீனாவுக்கு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததைப் பற்றி விளக்கினேன்..
எல்லாரும் வர்ஷினியைத் தேற்ற முயன்றனர்..
ஆனால் வர்ஷினி தன் அழுகையை நிறுத்தவே இல்லை..
பின்பென்ன இந்த சம்பவத்திற்கு முழுமுதற் காரணமான அக்யூஸ்ட் நம்பர் ஒன் விகாஷ் அந்த இடத்தை விட்டு விலக.. அக்யூஸ்ட் நம்பர் 2 பார்த்திபன் வர்ஷினியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்…
நான், ஜெய்மீ..கிறிஸ்டீனா.. விகாஷ், மதன் சார் அடுத்த விளையாட்டு விளையாட அங்கிருந்து கிளம்பினோம்..
தண்ணீரில் விளையாட விரும்பியவள்.. கண்ணீரில் இருக்கும் போது எப்படி விளையாடுவது என்ன எண்ணம் இருக்கத்தான் செய்தது.. இருந்தாலும்..
வர்ஷினிக்காக பார்த்திபன் இருக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம்..
அதனால் வர்ஷினியை பார்த்திபனிடம் ஒப்படைத்து விட்டு.. நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்..
– தொடரும்
–ர-ஆனந்தன்-