நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி, அதற்கான கொடி மற்றும் பாடலை கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகப்படுத்தினார். கொடியில் சிவப்பு – மஞ்சள் – சிவப்பு நிறங்களில் இரட்டை போர் யானைகளும், நடுவே வாகை மலரும் இடம்பெற்றிருந்தன. .

விஜய்யின் கட்சிக் கொடி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன,.கட்சியில் இடம் பெற்றுள்ள யானை உருவத்தை நீக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்தல் ஆணையத்தில் முறையிட போவதாகவும் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் எச்சரித்து இருந்தது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலங்களவை செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மதி , தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில், எங்களுடைய பகுஜன் சமாஜ் கட்சியானது நமது தேசத்தின் அரசமைப்பு தந்தை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களின் நம்பிக்கையும் வாக்குகளையும் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாகும் என்றும்

எங்களது தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும் தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி தனது எதிர்ப்பை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் அது குறித்து எந்த பதிலும் நடவடிக்கையும் நடிகர் விஜய் எடுக்காமல் இருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நாகரீகம் இல்லாமலும் சட்ட விரோதமாகவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை தனது புதிய கட்சி கொடியில் பயன்படுத்தியிருக்கும் நடிகர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர்தம் கொடியில் உள்ள எங்கள் யானை உருவத்தை அகற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க தாங்கள் வழி செய்ய வேண்டும் என அந்த புகார் மனுவில் வழக்கறிஞர் தமிழ்மதி வலியுறுத்தி உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here