இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமானது செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரங்களை வெளியிடும் sancik தளம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், படம் வெளியான 6ம் நாளான நேற்றைய தினம் கோட்திரைப்படம் தமிழகத்தில் 9.6 கோடி ரூபாயும், ஹிந்தியில் 0.8 கோடி ரூபாயும், தெலுங்கில் 0.7 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது.
தமிழகத்தில் 6 நாட்களில் 143.7 கோடி ரூபாயும், தெலுங்கில் 9.15 கோடி ரூபாயும், ஹிந்தியில் 10 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கோட் திரைப்படம் 178.25 கோடி ரூபாயும், ஓவர்சீஸ் மார்க்கெட்டில் 125 கோடி ரூபாயும், மொத்தமாக 303.25 கோடி ரூபாயை கோட் திரைப்படம் வசூல் செய்திருக்கிறது. இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.