இயக்குநர் செல்வராகவன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி பேசியிருந்தார்.ஆயிரத்தில் ஒருவன் படம் ஏற்படுத்திய காயத்தினால்தான் இன்றுவரை கண்ணீர் சிந்தி வருவதாக அவர் தெரிவித்திருந்தது ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது.
இந்த நிலையில் ஆன்மீகம் குறித்து பேசிய அவர் “யாரோ ஒருவர் எதையோ உளறிக்கொண்டு நான் ஆன்மிக குரு என்று பேசினால் நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு கேட்பீர்களா. உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக தேவையில்லை. அவரே உங்களை தேடி வருவார். உங்களுடைய சந்திப்பு தானாக நடக்கும்.
இதற்கு புத்தர் சொல்லும் தியானம் தான் ஈஸியான வழி. அதை செய்யும் போது எல்லாமே நடக்கும். தியானம் செய்யும் போது நிறைய விஷயங்கள் நினைவில் வந்து போகும். அதில் கவனம் செலுத்தாதீர்கள். அது வரும் பிறகு போய்விடும் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டு இருந்தால் ஒரு நாள் நீச்சல் தானாகவே வந்துவிடும்” என்றார்.
சமீபத்தில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்பர் ஆன்மிகத்தை பற்றி சொற்பொழிவாற்றியிருந்தது பெரும் சர்ச்சையாகி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.