ராவண​னாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? – யாஷ் விளக்​கம்

Priya
1013 Views
1 Min Read

நிதேஷ் திவாரி இயக்​கி​யுள்ள ‘ரா​மாயணா’ படத்​தில் ராவண​னாக நடித்​துள்​ளார், ‘கே.ஜி.எஃப்’ யாஷ். இதில் ரன்​பீர் கபூர் ராம​னாக​வும் சாய் பல்​லவி சீதை​யாக​வும் நடித்​துள்​ளனர். இரண்டு பாகங்​களாக உரு​வாகும் இப்​படத்​தின் முதல் பாகம் தீபாவளிக்கு வெளி​யாக இருக்​கிறது.

இந்​நிலை​யில் ராவணன் கதா​பாத்​திரத்​தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்​பது குறித்து யாஷ் கூறும்​போது, “சிறு​வய​திலிருந்தே நாம் ராமாயணக் கதையைக் கேட்டே வளர்ந்தவர்கள். நான் முதலில் கேட்ட கதை​யும் அது​தான். என் தாத்தா இந்​தக் கதைகளை எனக்​குச் சொல்​லு​வார். அதனால், ராவணன் பற்​றிய ஒரு கற்​பனை நம் மனதில் ஏற்​கெனவே இருக்கும்.

மேலும், பலரும் அந்​தக் கதா​பாத்​திரத்தை பல்​வேறு விதங்​களில் திரை​யில் சித்​தரித்​திருப்​ப​தை​யும் பார்த்​திருக்​கிறோம். ஒரு கதாபாத்​திரத்​தைப் பற்றி முன்பே யாருக்​கும் எந்​தக் கற்​பனை​யும் இல்​லை​யென்​றால், நீங்​கள் எப்​படி நடித்​தா​லும் அதுவே அந்​தக் கதா​பாத்​திரத்​தின் அடை​யாள​மாக மாறி​விடும். ஆனால், ராவணன் போன்ற அனை​வருக்​கும் பரிச்​சய​மான கதாபாத்திரத்தில், மக்​கள் ஏற்​கெனவே ஒரு உரு​வத்தை மனதில் வைத்​திருப்​ப​தால், ஒரு நடிக​ராக அது கூடு​தல் சவாலை ஏற்படுத்தியது.

அதிர்​ஷ்ட​வச​மாக, என் இயக்​குநரும், எழுத்​தாளர்​களும் அந்​தக் கதா​பாத்​திரத்தை வித்​தி​யாச​மான கோணத்​தில் அணுகுவதற்கான முழு சுதந்​திரத்தை எனக்​குக் கொடுத்​தார்​கள். அதனால்​தான் ராவண​னாக புதிய விதத்​தில் என்​னால் நடிக்க முடிந்​தது. அதை ரசிகர்​கள் விரும்​பு​வார்​கள் என்று நம்​பு​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply